Tuesday, April 8, 2008

வேட்டைநாயின் எச்சில்

அதீத நேசத்தின் வீச்சும் தனிமையின் கொடுமையும் ஒன்றா
நேசத்தின் சுவடுகள் அனைத்தும்
சித்திரை மாத வெக்கையாய்
அனலின் வீச்சுக்களை
அனுபவிக்க கற்றுக்கொண்ட மனம்
நேறறைய நிஜங்களின் நிழலில்
எத்தனை நாள் இளைப்பாருவது
மதுவின் கிண்ணத்தில் கூட அடங்க மறுக்கும் தனிமை
நகரத்தின் வண்ணத்துப்பூச்சியாய்
தேனற்ற மலரை நோக்கிய பயணம்
ஏமாறத்தைக்கூட ஏமாற்றக்கற்றுக்கொண்ட‌மனம்
தாகம் மிகுந்து நிமிர்கையில்
உருகிய தார் சாலையில்கானல் நீர் //