Tuesday, August 19, 2008


இருண்ட குகையின் முன்
பூத‌ம் தேடி நான்
நேற்று இர‌வு திருடிய‌
இள‌வ‌ர‌சியை எங்கு வைத்து இருக்கும்
பல்லியின் க‌த்த‌லில்
இனிய‌ ச‌ங்கீத‌ம்
எங்கும் ம‌சாலா வாச‌னை
கொத்திக்கும் நீரின் ச‌ப்த‌ம் கான‌க‌ம் முழுவ‌தும்
கூரிய‌ ப‌ற்க‌ளுட‌ன் என்னை நோக்கி பூத‌ம்
ப‌ய‌ம் தொற்றினாலும் ஓட‌ ம‌ன‌மில்லை
என்னைப்ப‌ற்றித்தூக்கிய‌து பூத‌ம்
அத‌ன் மேல் ராஜ வாச‌னை
அத‌ன் ப‌ல்லிடுக்கில் ஒரு முத்து
என‌க்கு இப்போது கூட‌ ஓட‌ ம‌ன‌மில்லை
ப‌ய‌ம் நிர‌ம்பிய‌ விழிக‌ளுட‌ன்

'


யாரும் இல்லா வீட்டில்
ஒற்றைக் கதிரொளி
சாரளத்தின் வழியே

இருட்டின் இடைவெளியில்
முனகலின் ஒலி
முன்னேப்பதையும் விட‌
உக்கிரமாய்

அம்மணமாய் நான்
கட்டிலின் கதைகேட்டு

கிழிந்த யோனித்திரையின்
இர‌த்த‌திட்டுக்க‌ள் வழிவே
அவ‌ள் பார்வை
குத்தும் ஈட்டியாய்

இப்போது இர‌த்த‌த்திட்டுக்க‌ளின்
தேவையில்லை ஆனால்
பார்வையின் வீச்சுமட்டும்
குறையேவே இல்லை

post scrap cancel

மூத்திரம்

வாழ்க்கைதேடி வந்த நகரத்தில்
பறவைகளுக்கு கூட
அவரசம்
பற்றிக்கொள்கிறது பூங்காவில்
அமர்ந்து ஃபூக்கோவை படித்து
நிமிர்கையில்
முட்டியது மூத்திரம்

அவசரமாய் இடம்தேடி
கண்ணுக்கு எட்டியதெல்லாம்
கண்ணாடி மாளிகையே

நீண்ட பயணத்தில்
மர்ம உறுப்புகளின்
மர்மத்தை வெறுத்த‌
பஸ்நிலைய கழிப்பறை
எப்போதும் வசிகரமாய்..