Friday, April 11, 2008

எச்சரிக்கை பிரதேசம்

பார்வையின் வழியே
அளந்த பெண்ணின் உடல்கள்
எப்போதும் வசிகரமாய்

காலை பஸ்நிலையங்களுக்குமட்டும்
ஏன் இத்துனை அழகு

வார்த்தை ஜாலங்களால்கன்னியரை
கவனமாய்பாதித்த தினங்கள் எத்தனை

இன்று அதே பஸ் நிலையம்எச்சரிக்கை
பிரதேசமாய் கண்களை கண்கானித்துக‌வ‌னமாய்
என் ம‌னைவியுட‌ன்

சவத்தின் மலர்கள்

ஆற்றின் வெள்ளம் மட்டும்தான்
அழகாய் எப்போதும்

கூடு திரும்பிய பறவைகளின்
கூக்குரல்கள் நாராசமாய்

இலையுதிர்த்த மரங்கள்
எப்போதும் கொண்டிருக்கும் தன்னுள்
ஆயிரம் கதைகள்

தேனீர்கடை எச்சங்கள்கூட
சோடியம்வேப்பரில் அழகாய்

மலரின் வாசம் சவத்தைச் சேருமாதான்
இறப்பதை கூட‌எண்ணாமல்
சவ ஊர்வலத்தின்சுவடுகளாய் மலர்கள்