Saturday, September 13, 2008

அலுவலக கண்ணாடியின்
அப்பால் ஒரு அழகான காகம்
தர்பண் எள் சோறு படிந்த 
அதன் அலகு மர்மம் உறைந்த்தாய்

பணி அழுத்தம் என்று
அவசரமாய் விழுங்கிய‌
வோட்காவுடன்

அவசர கலவிக்காய்
அரைகுறை மனதுடன் எப்போதும்
நான்

ம‌ஞ்ச‌ள்மல‌ர் பூக்கும்
ம‌ர‌த்தின் அடியில்
நாக‌த்தின் கொஞ்ச‌லில்
சாரை க‌ருப்ப‌ட்டி வாச‌த்துட‌ன்

என் உள்ளாடையை
விய‌ர்வை ந‌னைக்க‌
விரைவாக‌ நான்
க‌ற்ப‌னை க‌லைந்து
க‌ணினி முன்
வாழ்க்கைதேடி வந்த நகரத்தில்
பறவைகளுக்கு கூட அவரசம்
பற்றிக்கொள்கிறது
பூங்காவில் அமர்ந்து
ஃபூக்கோவை படித்து
நிமிர்கையில்
முட்டியது மூத்திரம்

அவசரமாய் இடம்தேடி
கண்ணுக்கு எட்டியதெல்லாம்
கண்ணாடி மாளிகையே

நீண்ட பயணத்தில்
மர்ம உறுப்புகளின்
மர்மத்தை வெறுத்த‌
பஸ்நிலைய கழிப்பறை
எப்போதும் வசிகரமாய்

எனக்கும் என் மனதிற்குமான‌
ஓர் மெல்லிய பாலம்
எத்தனை முறை கடந்து இருக்கிறேன்
சுகமான திரும்பல்களுடன்

ஒருநாள் எண்ணவேட்கையில்
என்னுடன் கடந்துவிடுகிறேன்
திரும்ப நேர்கையில் 
எத்துனை வலிகளும் ரணங்களும்