Thursday, August 21, 2008

சூனியம் சூழ்ந்த‌
இரவுத்தெருவின் இருண்ட‌
வெளியின் ஊடே
ஏதோ ஒரு க‌ட்டிலின்
உடையும் ச‌ப்தம்

உக்கிர‌புண‌ர்ச்சியின் வ‌சிக‌ர ஒலி
எங்கும் நிறைந்திருக்க‌ வெறுமை
நிர‌ம்பிய‌ ம‌ன‌ம் தேட‌லின் பால்
அம்ம‌ண‌மாய்

சில ச‌ன்ன‌ல்களின்
ஒளியின் க‌சிவு
சில‌ புரியாக‌தைக‌ளை
நித்த‌ம் புனைந்த‌ப‌டி

நாய்க‌ளின் ஊளை
அந்த‌ புனைவின் அர்த்த‌தை
நித்த‌ம் உதிர்த்த‌ப‌டி
உதிர்வின் அதிவுர்வுக‌ளை
உண‌ர‌த்தான் முடிகிற‌து
புரித‌ல‌ற்ற‌ வெளியில்

post scrap cancel