skip to main |
skip to sidebar
கடற்கரையின்
உவர்ப்பு சுவையை சுவாசித்த
படகின் ஒவ்வோரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை
களைய துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் வழியே
நிர்வாணத்தை சன்னமாய் மறுதலிக்கின்றன
அலைக்களிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில்
மணியோசையிடம் அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின்
உயிரோசையை மீனவனின்
வியர்வைத்துளியில் மறைத்துவிட
மறுக்கின்றன
அதன் பேரிரைச்சலை கடலிடமே
கடத்திவிட சூரியனின் வருகைக்கு முன்
மீண்டும் மிதக்கவிடுகிறது வலைகளை
நரகத்தில் கொதிக்கும்
எண்ணைச்சட்டியில் வெந்து போன
எனது சதைத்துண்டுகளை
சுவைத்தபடி கடவுளை நோக்கினேன்
அவன் எதோ சாதித்த திருப்தியில்
என் புன்னகையை பார்த்து
கோபமாய் கதறினான்
விரைப்பு எட்டாத அவன் ஆணுறுப்பு
மேலும் என்னை நகைப்புக்கு ஆளாக்கியது
என் உருகிய மேனியில் அரும்பும்
மெல்லிய வாசனை பெண்கடவுள்களை
மயக்கம் கொள்ள வைத்தது
அவளை புணர்ந்து எழும் போது
ஒரு வசிகரவாசனை என்னைச்சுற்றி
அந்த வாசனை பற்றி வினாவினேன்
அவள் மலம் கழிப்பதில்லை என்றால்
மலம் கடவுளுக்கு பிடிக்காத என்றேன்
சொர்கத்தில் யாரும் மலம் கழிபத்தில்லை என்றால்
சொர்கத்திற்கு அழைத்து செல்வதாய் சொன்னாள்
மலம் இல்லா சொர்க்கம் கொடுமையல்லாவா என்றேன்
அவளின் வறட்டுப்புன்னகை இந்த நரகத்தைவிட
நாராசமாய்....