Tuesday, August 19, 2008

மூத்திரம்

வாழ்க்கைதேடி வந்த நகரத்தில்
பறவைகளுக்கு கூட
அவரசம்
பற்றிக்கொள்கிறது பூங்காவில்
அமர்ந்து ஃபூக்கோவை படித்து
நிமிர்கையில்
முட்டியது மூத்திரம்

அவசரமாய் இடம்தேடி
கண்ணுக்கு எட்டியதெல்லாம்
கண்ணாடி மாளிகையே

நீண்ட பயணத்தில்
மர்ம உறுப்புகளின்
மர்மத்தை வெறுத்த‌
பஸ்நிலைய கழிப்பறை
எப்போதும் வசிகரமாய்..

No comments: