Tuesday, August 19, 2008


இருண்ட குகையின் முன்
பூத‌ம் தேடி நான்
நேற்று இர‌வு திருடிய‌
இள‌வ‌ர‌சியை எங்கு வைத்து இருக்கும்
பல்லியின் க‌த்த‌லில்
இனிய‌ ச‌ங்கீத‌ம்
எங்கும் ம‌சாலா வாச‌னை
கொத்திக்கும் நீரின் ச‌ப்த‌ம் கான‌க‌ம் முழுவ‌தும்
கூரிய‌ ப‌ற்க‌ளுட‌ன் என்னை நோக்கி பூத‌ம்
ப‌ய‌ம் தொற்றினாலும் ஓட‌ ம‌ன‌மில்லை
என்னைப்ப‌ற்றித்தூக்கிய‌து பூத‌ம்
அத‌ன் மேல் ராஜ வாச‌னை
அத‌ன் ப‌ல்லிடுக்கில் ஒரு முத்து
என‌க்கு இப்போது கூட‌ ஓட‌ ம‌ன‌மில்லை
ப‌ய‌ம் நிர‌ம்பிய‌ விழிக‌ளுட‌ன்

No comments: