உவர்ப்பு சுவையை சுவாசித்த
படகின் ஒவ்வோரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை
களைய துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் வழியே
நிர்வாணத்தை சன்னமாய் மறுதலிக்கின்றன
அலைக்களிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில்
மணியோசையிடம் அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின்
உயிரோசையை மீனவனின்
வியர்வைத்துளியில் மறைத்துவிட
மறுக்கின்றன
அதன் பேரிரைச்சலை கடலிடமே
கடத்திவிட சூரியனின் வருகைக்கு முன்
மீண்டும் மிதக்கவிடுகிறது வலைகளை
No comments:
Post a Comment