Monday, April 21, 2008

.


விழியின் ஓரம்
அரும்பும் கண்ணீரின்
ஊற்றையும் உவர்ப்பையும்
உண்ர‌த்தான் முடிய‌வில்லை

ஆழ்வெளி ம‌ன‌துக்குள்
சில‌ இருள்வெளிக‌ள்
தனிமையை வ‌சிக‌ரிக்க‌

சுய‌ பிர‌க்ஞையிழ‌ந்த‌
ம‌கிழ்ச்சியை எப்போதும்தேடித்திருகிறேன்

கொட்டிய‌வார்த்தைக‌ளை
ம‌ன‌ முடிச்சில் இறுக்கி
மாறி மாறி சிரிக்கிறோம்

க‌ட்ட‌மிட்ட‌ வாழ்வில்
முன் முடிவுக‌ளால் ம‌ட்டுமே
ம‌னித‌ம் இங்கு ம‌னித‌மாய்

1 comment:

ஜமாலன் said...

நண்பருக்கு வாழ்த்துக்கள்.

கன்னி முயற்சி தொடர..

//க‌ட்ட‌மிட்ட‌ வாழ்வில்
முன் முடிவுக‌ளால் ம‌ட்டுமே
ம‌னித‌ம் இங்கு ம‌னித‌மாய்//

நல்ல வரிகள். இங்கு மட்டுமலல் எங்குமே அப்படித்தான். முன்முடிவுகள் என்பதில் பல தத்துவக் கோட்பாடு எல்லாத்தையும் அடக்கலாம்.