Monday, September 22, 2008

மாலையின் வடியலை
கணக்கிட்டு கொண்டே ஒவ்வோரு நிமிடமும்
அர்த்த‌ங்க‌ளை புதிராக்கி கொண்ட‌
இருளுக்குள் ஒரு ஓநாயைப்போல‌
சுற்றி அலையும் ம‌ன‌தின் 
ஒவ்வோரு பாகமும் உதிர‌த்தின்
சுவையை வித்தைதுக்கொண்டே
ப‌ய‌ன‌ப்ப‌ட்ட ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின்
மினுப்பில் நில‌வின் பிர‌காத்தை
புற்ம்தள்ளும் அத‌ன் வேக‌த்தை
க‌ன‌வில் மீட்டுக்கொள்ளும் அத‌ன் 
வெளிச்ச‌த்தின் சுவ‌டுக‌ளின்
நறுமணதை ப‌ற‌வையின்
சிற‌குக‌ளில் க‌ட்டி மேலேம்பும்
அத‌ன் கூறுக‌ள் சூரிய‌னின்
ஒளியில் எங்க‌ங்கோ த‌ன்னை உருமாற்றி
அத‌ன் இருப்பை தொலைத்துவிட எத்தனிக்கின்ற‌ன‌

பார்வைகளில் ப‌தியாத‌
எத்த‌னையோ நிக‌ழ்வுக‌ள்
ச‌ன்ன‌மாய் ந‌ம‌து ஒவ்வோரு
செய‌லிலும் த‌ன்னை ஸ்தாபித்து
ந‌ம்மை எதை நோக்கியோ
இழுத்துச்செல்கின்றன‌

காலையில் ப‌ர‌விடும் த‌ன‌து
முத‌ல் க‌ற்றைக‌ளுக்கு
சூரிய‌னின் இய‌ல்புக‌ள் தாண்டி
அது ப‌ட்டெழும்பும் உயிர் இய‌ல்புக‌ளை
சூரிய‌னுக்குள் இழுத்து அத‌ன் உயிர்ப்பை
நித்த‌ம் உயிப்பிக்கின்ற‌ன‌

உதிர‌ங்க‌ளின் உண்ர்வுக‌ளை
புதைத்க்கொண்டே இருளின் க‌னவில்
நித்த‌ம் கொலை செய்ய‌ப்ப‌டுகின‌ற‌ன‌
ந‌ம்து முக‌ங்க‌ள்

No comments: