Monday, September 22, 2008

கடற்க‌ரையின்
உவர்ப்பு சுவையை சுவாசித்த‌
படகின் ஒவ்வோரு மரக்கட்டையும்
கிளைத்து வளர்ந்த அதன் வேர்களை
களைய துடுப்புடன் நித்தமிட்ட சண்டையில்
அது கலைந்த இலைகளின் வழியே
நிர்வாணத்தை சன்னமாய் மறுதலிக்கின்றன‌

அலைக்களிடம் பேசும் அதன்
நங்கூரமிட்ட கயிற்றின் கதைகளை
கேட்க மனமில்லமால்
தூரத்து கோயில்
மணியோசையிடம் அதன் ரகசியத்தை பகிர்தலில்
நேற்று துடித்தடங்கிய மீன்களின்
உயிரோசையை மீனவனின்
வியர்வைத்துளியில் மறைத்துவிட‌
மறுக்கின்றன

அதன் பேரிரைச்சலை கடலிடமே
கடத்திவிட சூரியனின் வருகைக்கு முன்
மீண்டும் மிதக்கவிடுகிறது வலைகளை

No comments: