Monday, September 22, 2008

இறுக்கம் தளர்ந்த ஒரு
நொடிப்பொழுதில் பூத்த‌
ஒற்றை ரோஜா தன் சிவப்பு நிறத்தால்
முள்களின் வலியை சுமந்தாலும்
பச்சையம் இழந்த இலைக‌ளின்
சுவாச‌த்தை த‌ன்னுள் பொதிந்து
இர‌த்த‌ சுவ‌டாய்

வேர்க‌ளின் விலாச‌த்தை துற‌ந்த‌
வேளையில் அத‌ன் இறுதிப்ப‌ய‌ண‌ம்
அத‌ன் சுவாச‌ங்க‌ளுக்காய்

அத‌ன் சுவாச‌த்தின் வீச்சு
இத‌ழ்க‌ளின் துற‌ப்பில் மெல்ல‌ மெல்ல‌

த‌ன் சுய‌ம் இழ‌ந்து க‌ல‌ந்த‌து
இந்த‌ பெருவெளியில் சுவாச‌மாய்

No comments: