Monday, September 22, 2008

பஸ் நிலைய வாசனை
அதனுடன் கடந்து செல்லும்
மனிதர்களின் மனித‌த்தை மட்டும்
பிரதிபலிப்பதேயில்லை

மன நோயாளியை ஒத்த‌
அதன் குரலின் கலவையில்
எத்தனை கதைகளின்
உடாடல்கள்

புழுதி ப‌ற‌க்கும்
நியான் வெளிச்ச‌த்தில்
ஒவ்வோரு இருக்கையிலும்
வ‌ழிந்தோடும் காத‌ல்

க‌ழிவ‌றை சுத்த‌ம் செய்ப‌வ‌னின்
வ‌ச‌வு வார்த்தைக‌ளில்
ஆணுறை வ‌ழியே
எங்கு சிதறி கிட‌க்கின்ற‌ன‌
சில‌ அவ‌ச‌ர‌க்காதல்கள்

இப்போதும் புரிய‌வில்லை]
அத‌ன் வாச‌னையும் அவனின் குர‌லும்

No comments: