Monday, September 22, 2008

கரைந்த மனிதத்திரளிள்
கொள்கையின் வழியில் பயணம்
கேள்விகள் எழும் போது மட்டும்
படபடப்புடன் சூட்டப்படும் அடையாளம்
அவமானகரமாய்
பொருளாள் மட்டும் சூழ்ந்த இந்த‌
பிரபஞ்சத்தில் அடையாளம் மட்டும் இலவசமாய்
நமக்கான அடையாளம் பிறரின் வார்த்தைகளில் ம‌ட்டும்
வ‌ழிந்தோடுவ‌தாய் பின்ன‌ப்ப‌டும் வ‌ளைய‌ங்க‌ளை
விரும்பி சூட்டிக்கொள்கிறோம்
அந்த‌ நெருப்பு வ‌ளைய‌ங்க‌ள் சிறு தூற‌லால்
எழுப்பும் புகையைகூட‌ அணுகுண்டின்
அழிவை ஒத்த‌ ப‌ட‌ப‌ட‌ப்பு ஏன்?
சில‌ வினாக்க‌ள் வினாக்க‌ளாகவே
எஞ்சிவிடுவதான் ந‌ட்போ? 

No comments: