Monday, September 22, 2008

ஆண்குறியிட்ட கழிவறை
அரைக்கதவில் சில வாக்கியங்கள்
பின்னான பயணம்

பாலியலின் நிறைவேற‌
இருண்மைகள் இங்கு
முலைக்கம்பின் கோடுகளின்
வழியே

சில திறந்த யோனிகளின்
பார்வைகள் நம்மை
கூசச்செய்கின்றன‌

திருப்தியுறா நமது மனவெளிக்குள்
புகுந்து கனவுகளின் கரையில்
லயித்திரிந்த வேளை

சில அவசரக்குரல்கள்
உடைந்த வாளியின் தண்ணிர் ஒழுகளாய்
அவசரமாய் கழுவி எழுந்த போது
சில எண்ண அலைகள்
இப்போதும் கழிவறை வாசத்துடன்  

No comments: