வார்த்தைகளின் பின்னால்

Monday, April 6, 2009

...


நீண்ட‌ ஒரு மாலைப்பொழுதில்
என் பார்வைகளுக்கு அப்பால்
தோன்றிய அந்த மாநிற பெண்ணின்
குதிகால் உய‌ர்ந்த‌ செருப்பை
அவ‌ளின் ம‌ல்லிகை பூவால் அல‌ங்க‌ரிப்ப‌தை
க‌ட‌ந்து சென்ற‌ காற்றின் வ‌ழியே
என‌க்கு உண்ர்த்தினால்
என‌து கோரைப்ப‌ற்க‌ள் இப்போது
அவ‌ளின் உதிர‌த்தை சுவைக்க‌
வ‌ள‌ர‌த்தொட‌ங்கின‌
ம‌ல்லிகையின் வாச‌னை நெருங்க‌ நெருங்க‌
க‌ட்டுக்க‌ட‌ங்கா என‌து பசியால்
அவ‌ள் கழுத்தின் ஓர‌ம்
மெல்லிய‌தாய் ப‌தித்தேன் என‌து ப‌ற‌க‌ளை
அவ‌ளின் இர‌த்த‌ம் ப‌ச்சைய‌ வாச‌த்துட‌ன்
அவ‌ளின் காய்த்துப்போன கைக‌ளால்
என‌து அணுறுப்பை அழித்தி பிடித்தால்
அவ‌ளின் இர‌த்த‌ம் வ‌ற்றிய‌ உட‌லை
க‌வ்விய‌ப‌டி மேலேழுந்து சென்றேன்
அவ‌ளின் மெல்லிய‌ முன‌க‌ல்
என்னை அதிக‌ தூர‌ம் இழுத்து சென்ற‌து
விடிய‌லை நோக்கி ந‌க‌ர்ந்து போது
என‌து தூர‌ம் சுருங்கி என‌து ப‌டுக்கைய‌றையில்
நாய்குட்டியாய் நான்
அவ‌ளோ ப‌டுக்கை விரிப்பை
சுற்றிய‌ப‌டி பூஜைய‌றையில்

..........


நரகத்தில் கொதிக்கும்
எண்ணைச்சட்டியில் வெந்து போன‌
எனது சதைத்துண்டுகளை
சுவைத்தபடி கடவுளை நோக்கினேன்
அவன் எதோ சாதித்த திருப்தியில்
என் புன்னகையை பார்த்து
கோபமாய் கதறினான்
விரைப்பு எட்டாத அவன் ஆணுறுப்பு
மேலும் என்னை நகைப்புக்கு ஆளாக்கியது
என் உருகிய மேனியில் அரும்பும்
மெல்லிய வாசனை பெண்கடவுள்களை
மயக்கம் கொள்ள வைத்தது
அவளை புணர்ந்து எழும் போது
ஒரு வசிகரவாசனை என்னைச்சுற்றி
அந்த வாசனை பற்றி வினாவினேன்
அவள் மலம் கழிப்பதில்லை என்றால்
கடவுளுக்கு மலம் மட்டுமல்ல‌
மலம் கழிக்கும் பெண்களையும்
பிடிகாதோ?

இருப்பினும் மலம் கழிக்கா
இயந்திரமும் தேவைப்படுகிறது
யாருமற்ற வெளியில்

Saturday, April 4, 2009

பதில்களுக்கான கேள்விகள்

கரைந்த மனிதத்தில்
பதில்களுக்கான கேள்விகள்
எழும் போது
எனக்கான அடையாளத்தை
கேள்விக்குள் பதுக்கி
தூக்கி எறிகிறேன் அடையாள்த்தின்
ஆடைகளை

அம்மாண்மாய் என்னை நான்
பார்க்கும் போது அவசரமாய்
ஆடைகள் தேடி
அடையாளத்தை துறக்கிறேன்

இருளில் உலாவும் என‌து
எண்ணங்களின் பதில்கள்
மோதித்தெறித்து
பெருங்குரலேடுத்து கத்துகின்றன‌
பதில்களே போதும் என‌

Monday, September 22, 2008

இறுக்கம் தளர்ந்த ஒரு
நொடிப்பொழுதில் பூத்த‌
ஒற்றை ரோஜா தன் சிவப்பு நிறத்தால்
முள்களின் வலியை சுமந்தாலும்
பச்சையம் இழந்த இலைக‌ளின்
சுவாச‌த்தை த‌ன்னுள் பொதிந்து
இர‌த்த‌ சுவ‌டாய்

வேர்க‌ளின் விலாச‌த்தை துற‌ந்த‌
வேளையில் அத‌ன் இறுதிப்ப‌ய‌ண‌ம்
அத‌ன் சுவாச‌ங்க‌ளுக்காய்

அத‌ன் சுவாச‌த்தின் வீச்சு
இத‌ழ்க‌ளின் துற‌ப்பில் மெல்ல‌ மெல்ல‌

த‌ன் சுய‌ம் இழ‌ந்து க‌ல‌ந்த‌து
இந்த‌ பெருவெளியில் சுவாச‌மாய்
பஸ் நிலைய வாசனை
அதனுடன் கடந்து செல்லும்
மனிதர்களின் மனித‌த்தை மட்டும்
பிரதிபலிப்பதேயில்லை

மன நோயாளியை ஒத்த‌
அதன் குரலின் கலவையில்
எத்தனை கதைகளின்
உடாடல்கள்

புழுதி ப‌ற‌க்கும்
நியான் வெளிச்ச‌த்தில்
ஒவ்வோரு இருக்கையிலும்
வ‌ழிந்தோடும் காத‌ல்

க‌ழிவ‌றை சுத்த‌ம் செய்ப‌வ‌னின்
வ‌ச‌வு வார்த்தைக‌ளில்
ஆணுறை வ‌ழியே
எங்கு சிதறி கிட‌க்கின்ற‌ன‌
சில‌ அவ‌ச‌ர‌க்காதல்கள்

இப்போதும் புரிய‌வில்லை]
அத‌ன் வாச‌னையும் அவனின் குர‌லும்
கரைந்த மனிதத்திரளிள்
கொள்கையின் வழியில் பயணம்
கேள்விகள் எழும் போது மட்டும்
படபடப்புடன் சூட்டப்படும் அடையாளம்
அவமானகரமாய்
பொருளாள் மட்டும் சூழ்ந்த இந்த‌
பிரபஞ்சத்தில் அடையாளம் மட்டும் இலவசமாய்
நமக்கான அடையாளம் பிறரின் வார்த்தைகளில் ம‌ட்டும்
வ‌ழிந்தோடுவ‌தாய் பின்ன‌ப்ப‌டும் வ‌ளைய‌ங்க‌ளை
விரும்பி சூட்டிக்கொள்கிறோம்
அந்த‌ நெருப்பு வ‌ளைய‌ங்க‌ள் சிறு தூற‌லால்
எழுப்பும் புகையைகூட‌ அணுகுண்டின்
அழிவை ஒத்த‌ ப‌ட‌ப‌ட‌ப்பு ஏன்?
சில‌ வினாக்க‌ள் வினாக்க‌ளாகவே
எஞ்சிவிடுவதான் ந‌ட்போ? 
ஆண்குறியிட்ட கழிவறை
அரைக்கதவில் சில வாக்கியங்கள்
பின்னான பயணம்

பாலியலின் நிறைவேற‌
இருண்மைகள் இங்கு
முலைக்கம்பின் கோடுகளின்
வழியே

சில திறந்த யோனிகளின்
பார்வைகள் நம்மை
கூசச்செய்கின்றன‌

திருப்தியுறா நமது மனவெளிக்குள்
புகுந்து கனவுகளின் கரையில்
லயித்திரிந்த வேளை

சில அவசரக்குரல்கள்
உடைந்த வாளியின் தண்ணிர் ஒழுகளாய்
அவசரமாய் கழுவி எழுந்த போது
சில எண்ண அலைகள்
இப்போதும் கழிவறை வாசத்துடன்